அருள் எம்எல்ஏ ஒரு சாக்கடை அன்புமணி ஆவேசம்
ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூரில் பாமக சார்பில் ‘உரிமை மீட்க தலைமுறை காக்க” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பாமக தலைவர் அன்புமணி பேசுகையில், ‘சேலம் மாவட்டம் டேனிஷ் பேட்டையில் சுத்தமாக வரும் தண்ணீர், ஓமலூரில் இருந்து சாக்கடையாக மாறி விடுகிறது. சேலத்தில் மற்றொரு சாக்கடை (அருள் எம்எல்ஏ) உள்ளது. அதை பற்றி பேச வேண்டாம். எதிர்கால சந்ததியினர் சரபங்கா நதியை பயன்படுத்த வேண்டும். அதனால், அடிவாரத்தில் அணை கட்ட வேண்டும். இவ்வாறு அன்புமணி பேசினார்.
Advertisement
Advertisement