தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கலைஞரின் ஒளியில் "எதிலும் தமிழ்நாடு முதலிடம்" எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: தந்தை பெரியாரும், அண்ணாவும் தமிழினத்துக்கு தந்த நெருப்பு கலைஞர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 7வது ஆண்டு நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது;

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:

தலைவர் கலைஞர் - முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு!

தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு!

அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட - முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் “எல்லார்க்கும் எல்லாம்” - “எதிலும் தமிழ்நாடு முதலிடம்” எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்!. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி. கனிமொழி:

எழுதும் பேனாவில் தொடங்கி, வாசிக்கும் புத்தகம், முழக்கமிடும் போராட்டக் களம், உரை நிகழ்த்தும் நாடாளுமன்றம், தினம் எதிர்ப்படும் மக்கள் என எங்கு காணினும் தென்படும் உங்கள் முகமே!

கருத்தாய், கண்மணியாய், கொள்கைக் குன்றாய், வழிகாட்டும் கலங்கரை விளக்கமாய், நீங்காத நிழலாய், நெஞ்சுக்கு நிகரான உயிராய், உயிரினும் மேலான தலைவராய் எங்களுள் நீக்கமற நிறைந்து நிற்கும் முத்தமிழறிஞரே நீங்கள் காட்டிய சமூகநீதிப் பாதையில் ஆயிரம் ஆயிரமாய் அணிவகுத்திடுவோம்! எல்லார்க்கும் எல்லாம் என்பதை வென்றெடுத்திடுவோம்!. இவ்வாறு தெரிவித்துள்ளார்.