பலருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கூறி கூலிப்படை ஏவி மனைவியை கொன்ற ராணுவ வீரர் கைது
இதுகுறித்து ஜெர்மின் பெற்றோர் அளித்த புகாரில், ‘‘ஜெர்மினை அவரது கணவர் விஜயகோபால் தான் ஆள் வைத்து கொலை செய்துள்ளார்’’ என கூறியிருந்தனர். இதனால் உத்தரக்காண்ட்டில் பணியில் இருந்த விஜயகோபாலை, சாயல்குடி போலீசார் வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து விஜயகோபால் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவிக்கையில், ‘‘திருமணம் ஆகி குழந்தை பிறந்த சில ஆண்டுகளிலேயே எனக்கும், ஜெர்மினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஜெர்மின் பெயரில் வீடு கட்டியதால், அவர் வீட்டை அபகரித்துக் கொண்டார். விவாகரத்து கோரிய அவர், தனக்கு மாதந்தோறும் ரூ.17,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.
இந்த நிலையில் அவர், பலருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இதனால் எனது குடும்பத்தினருக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது. இதனால் கூலிப்படையை ஏவி கொன்றேன் என விஜயகோபால் கூறினார்’’ என்றனர். இதையடுத்து விஜயகோபாலை போலீசார் கைது செய்தனர். அவரது தந்தை வயணன் உள்ளிட்ட 4க்கும் மேற்பட்டோருக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.