ராணுவத்தில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை
ஆர்மி ஸ்போர்ட்ஸ் கோட்டா (2025-26).
வயது: 31.03.2001க்கும் 01.04.2008க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.
ஆட்சேர்ப்பு நடைபெறும் விளையாட்டு பிரிவுகள் விவரம்:
அதலெடிக்ஸ் (ஆண்), வில்வித்தை (ஆண்), கூடைப்பந்து (ஆண்), மல்யுத்தம் (ஆண்), டைவிங் (ஆண்), கால்பந்து (ஆண்), பென்சிங் (ஆண்), ஜிம்னாஸ்டிக்ஸ் (ஆண்), ஹாக்கி (ஆண்), வாலிபால் (ஆண்), ஜூடோ (ஆண்), கபடி (ஆண்), கராத்தே (ஆண்), ரோவிங் (ஆண்), நீச்சல் (ஆண்), படகு ஓட்டுதல் (ஆண்), துப்பாக்கி சுடுதல் (ஆண்), டேக்வோண்டோ, கைப்பந்து (ஆண்), பளு தூக்குதல் (ஆண்), குத்துச்சண்டை (ஆண்).
தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட விளையாட்டுகள் ஏதாவதொன்றில் சீனியர்/ஜூனியர் பிரிவில் சர்வதேச விளையாட்டு போட்டிகள் அல்லது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் அல்லது பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று விளையாடியிருக்க வேண்டும்.
உடற்தகுதி: குறைந்தபட்சம் 166 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். 1.6 கி.மீ., தூரத்தை 5.45 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். மேலும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டிகளில் வெற்றி பெற ேவண்டும்.விளையாட்டு தகுதி் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு ராணுவத்தில் 3 வருடம் உதவித் தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள் இந்திய ராணுவத்தில் ஹவில்தார்/சுபேதாராக பணியமர்த்தப்படுவர்.
01.10.2023க்கு பின்னர் விளையாட்டுத் துறையில் பெற்ற சாதனைகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.2025.