ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி பிரபல ரவுடி நாகேந்திரனுக்கு ஸ்டான்லியில் தீவிர சிகிச்சை: வதந்தி பரவியதால் பரபரப்பு
சென்னை: சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி நாகேந்திரன். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இவர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கல்லீரல் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதியளிக்க வேண்டும் என போலீசாரிடம் கோரிக்கை விடுத்து இருந்தார். போலீசார் அனுமதி மறுத்ததால், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, நாகேந்திரன் உடல்நிலை மோசமானதால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து தவறான வதந்தி பரவியது. இதுபற்றி அறிந்த அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.