ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவரது மனைவி பொற்கொடி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு!!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவரது மனைவி பொற்கொடி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சி.பி.ஐ. விசாரணையை தொடர்ந்து நடத்த கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து சி.பி.ஐ. விசாரணையை கண்காணிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement