அரியலூர் அருகே பரபரப்பு.. விபத்தில் சிக்கிய லாரி: வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள்
அரியலூர்: அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்தின் அருகே இன்று காலை கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி சாலை வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சிலிண்டர்கள் வெடித்து தீப்பற்றி எரியும் சம்பவம் நடந்துள்ளது. இந்த லாரியில் திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவர் இன்டேன் கேஸ் சிலிண்டரை திருச்சி குடோனில் இருந்து அரியலூர் டிலருக்கு லாரி மூலம் சிலிண்டரை ஏற்றி கொண்டு வந்துள்ளார்.
அப்போது அரியலூர் அருகேயுள்ள வாரணவாசி கிராமத்தில் திருப்பத்தில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் விழுந்து சிலிண்டர் வெடித்துள்ளது. இதையடுத்து அருகேயுள்ள வீட்டில் உள்ளவர்களை உடனடியாக அப்புறப்படுத்தி வெளியில் கொண்டு வந்தனர். மேலும் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் அருகில் செல்ல முடியாமல் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதால் அருகில் செல்ல முடியாமல் திணறி வந்தனர்.
மேலும் இதனையடுத்து அரியலூர் மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் நேரில் வந்து ஆய்வு செய்து வந்தனர். மேலும் இதனையடுத்து அரியலூரில் இருந்து திருச்சி, தஞ்சை செல்லும் போக்குவரத்துகளை மாற்றி அமைத்து பொதுமக்கள் சிரமம் அமையாமல் காவல் துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பொழுது சிலிண்டர் ஓரளவு வெடிக்காமல் இருப்பதால் தீயணைப்பு துறையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.