2024ல் வாக்களித்தோர் சட்டவிரோதமாக குடியேறியவர்களா?: காங்கிரஸ் கேள்வி
பீகார்: 2024 தேர்தலில் பீகாரில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வாக்களித்தார்களா? இல்லையா? என பீகார் காங். தலைவர் ராஜேஷ்ராம் கேள்வி எழுப்பியுள்ளார். மோடிக்கு 2024ல் வாக்களித்தவர்களை இப்போது சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று கூறுகிறீர்களா? என்றும், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வாக்களித்துதான் ஒன்றிய பாஜக அரசு அமைந்ததா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சட்டவிரோத குடியேறிகள் பீகாரில் இருந்தால் அவர்களது பட்டியலை உள்துறை அமைச்சகம் வெளியிட வேண்டும். சட்டவிரோத குடியேறிகள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.
Advertisement
Advertisement