பேராயர் எஸ்றா சற்குணம் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
Advertisement
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. 26ம் தேதி நல்லடக்கம் செய்யப்படுகிறது. எஸ்றா சற்குணம் மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன். கலைஞருடன் நெருக்கமான நட்பும், அன்பும் கொண்டிருந்தவர்.
சிறுபான்மையினரின் நலன் பாதுகாக்கப்படவும், அவர்களது உரிமைகள் வென்றெடுக்கப்படவும் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு வந்த பேராயர் எஸ்றா சற்குணம் மறைவு, கிறித்தவப் பெருமக்களுக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் திருச்சபை நிர்வாகிகள் - உறுப்பினர்களுக்கும்,, குடும்பத்தினருக்கும்் எனது ஆழ்ந்த இரங்கலைதெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement