நுகர்பொருள் வாணிப கிடங்கு முற்றுகை: அறப்போர் இயக்கத்தினர் கைது
Advertisement
அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மெட்ரோ நிர்வாக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அறப்போர் இயக்கத்தின் நிர்வாகிகள் இன்று காலை வந்தனர். பின்னர் அவர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் பெயரை தமிழ்நாடு கிறிஸ்டி வாணிப கழகம் என்று மாற்றவேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். மேலும் வாணிபக் கழக ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டினர். இதனிடையே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் உள்ளே நுழைய முயன்ற அறப்போர் இயக்கத்தினர் 12 பேரை கைது செய்து நெற்குன்றம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.
Advertisement