ஆரணி அருகே இரண்டு தனியார் பள்ளிப் பேருந்துகள் மோதி விபத்து: 25-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் படுகாயம்
திருவண்ணாமலை: ஆரணி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் மோதி கொண்ட விபத்தில் 25 மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளார். ஆரணி அருகே நெசல் கிராமத்தில் விகாஷ் வித்யாஷ்ரம் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த தனியார் பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று வழக்கம் போல் காலையில் பள்ளி வாகனம் காலம்பூரில் இருந்து சீனிவாசபுர வழியாக அந்த பள்ளிக்கு சென்று இருந்த நிலையில், சீனிவாசபுர கூட்ரோடு அருகே அதே பள்ளியில் சேர்ந்த விகாஷ் வித்யாஷ்ரம் பள்ளி வாகனமும் பின்னாடி வந்த வாகனமும் ஒன்று பின் ஒன்று மோதியது. இதனால் வாகனத்தில் இருந்த மாணவிகள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
முன் பேருந்தில் இருந்த 20 மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்தனர். 25 மாணவர்களும் தச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே பெற்றோர்கள் மாணவ, மாணவிகள் விபத்தை குறித்து தகவல் அறிந்து ஒருவர் ஒருவராக மருத்துவமனைக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து ஆரணி கிராமத்து காவல் நிலைய, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பெற்றோர்களும், ஊர் பொதுமக்களும் இரண்டு ஓட்டுனரையும் கைது செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இரண்டு பள்ளி பேருந்துகள் மோதியதால் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.