அப்ரிலியா எஸ்ஆர் 125
அப்ரிலியா நிறுவனம், எஸ்ஆர் 175 அறிமுகத்தைத் தொடர்ந்து, மேம்படுத்தப்பட்ட புதிய எஸ்ஆர் 125 ஸ்கூட்டரை சந்தைப்படுத்தியுள்ளது. இதில் 125 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 10.6 எச்பி மற்றும் 10.4 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். அதாவது, முந்தைய மாடலை விட, மேம்படுத்தப்பட்ட புதிய மாடல் கூடுதலாக 0.3 எச்பி பவரையும், 0.1 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
புதிய வாகன உற்பத்தி விதிகளுக்கு ஏற்ப, வாகனத்தில் பழுது ஏற்பட்டால் எச்சரிக்கும் தொழில் நுட்பம் உள்ளது. இதுபோல் ஆர்எஸ் 457ல் உள்ளதைப் போன்று புளூடூத் இணைப்பு வசதி கொண்ட டிஎப்டி டிஸ்பிளே இதில் புதிய அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது. ஷோரூம் விலை சுமார் ரூ.1.2 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் என்டார்க் 125, ஹீரோ ஜூம் 125 ஆகிய ஸ்கூட்டர்களுக்கு இது போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.