தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முடியாது: அமைச்சர் துரைமுருகன் உறுதி
வேலூர்: தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முடியாது என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னையில் இருந்து நேற்று காட்பாடி வந்தார். அப்போது கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை தமிழக அரசு விட்டுக்கொடுப்பதாக வைக்கப்படும் விமர்சனம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
Advertisement
அதற்கு அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், ‘பைத்தியக்காரத்தனமாக பேசுபவர்களுக்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. எப்பேர்ப்பட்ட அல்லது யார் முயற்சியாக இருந்தாலும், சுப்ரீம் கோர்ட் அல்லது ஆணையமாக இருந்தாலுமே கூட தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முடியாது என ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். பிறகு அதை பற்றி திரும்ப திரும்ப பேசுவது ஏன்?’ என்றார்.
Advertisement