காலி இடம் குறித்து தகவல் தெரிவிக்காத காரணத்தால் பணி நியமனத்திற்கு ஒப்புதலளிக்க மறுக்க கூடாது: உதவி பேராசிரியர்கள் நியமன வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.ஜெயபிரகாஷ், 1999-2000ம் ஆண்டில் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் விவரம், 1999ம் ஆண்டு முதல் பணியாற்றும் பேராசிரியர்கள் விவரம், நியமனம் தொடர்பான கல்லூரி குழு தீர்மான விவரங்கள் உள்ளிட்ட விவரங்கள் சமர்ப்பிக்கப்படாததால், நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை என்று விளக்கமளித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிறுபான்மை கல்லூரிகளில், பேராசிரியர்களின் கல்வித்தகுதி குறித்து தீர்மானிக்க மட்டுமே மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. காலியிடங்கள் விவரங்களை தரவில்லை என்று உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுக்க முடியாது. எனவே, ஒப்புதல் வழங்க மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மூன்று மாதங்களில் லயோலா கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட 19 நியமனங்களுக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு உத்தரவிட்டார்.