இளநிலை பொறியாளர்கள் உள்பட 2,538 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
11:01 AM Aug 06, 2025 IST
சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தேர்வான 2,538 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார். உதவி பொறியாளர்கள், நகரமைப்பு அலுவலர்கள், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட பணிகளில் இளைஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.