சென்னை: அரசு மருத்துவர் பணிக்கான இறுதிப் பட்டியலில் 400 மருத்துவர்களின் பெயரை நீக்கியதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், அரசு மருத்துவர்கள் நியமனம், வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ கவுன்சிலில் 2024 ஜூலை 15க்கு முன் பதிவு செய்யவில்லை எனக் கூறி நீக்கப்பட்டதாக மருத்துவர் சாய் கணேஷ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.