சென்னை: தமிழ்நாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம். முதுகலை படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 15ல் முடிந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஆக்ஸ்ட் 4ம் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஆக்ஸ்ட் 11ல் நடைபெறும்; பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 13ல் தொடங்கும். முதலாமாண்டு முதுகலை மாணவர்களுக்கான வகுப்பு ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்கும்.