அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார்
Advertisement
சென்னை: அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார். அதிமுகவில் இருக்கும்போதே தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என்று அன்வர் ராஜா அண்மையில் பேட்டி அளித்திருந்தார்.
Advertisement