டெஃப்லிம்பிக்சில் தங்கம் வென்ற அனுயா
Advertisement
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் டெஃப்லிம்பிக்ஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. ஏர் பிஸ்டல் பிரிவில் நேற்று நடந்த போட்டியில் இந்திய வீராங்கனை அனுயா பிரசாத் அற்புதமாக செயல்பட்டு தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை பிராஞ்சலி வெள்ளிப்பதக்கம் வென்றார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் பிரிவில், இந்திய வீரர் அபிநவ் தேஷ்வால் சிறப்பாக செயல்பட்டு வெள்ளிப் பதக்கம் பெற்றார். இதையடுத்து, கடந்த 2 நாட்களில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
Advertisement