அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் முழக்கம்: மக்களவை ஒத்திவைப்பு
டெல்லி: மக்களவையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தை எழுப்பிய அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் முழக்கத்தை அடுத்து மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்துக்கள் மீது தடியடி நடத்தியதாக அனுராக் தாக்கூர் பேசியதற்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கமிட்டனர். அனைத்து எம்.பி.க்களும் அனுராக் தாக்கூருக்கு எதிராக அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டதால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
Advertisement
Advertisement