வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி 28ம் தேதி வரை மழை பெய்யும்
Advertisement
இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதேநிலை 28ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இன்று இயல்பை ஒட்டிய வெப்பநிலை இருக்கும். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
Advertisement