முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீஸ் தாக்கல் செய்த மனுவுக்கு மதுரை ஆதீனம் பதில் தர ஐகோர்ட் உத்தரவு
Advertisement
சென்னை: முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீஸ் தாக்கல் செய்த மனுவுக்கு மதுரை ஆதீனம் பதில் தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. காவல்துறை தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட் நீதிபதி நிர்மல்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. ஜூலை 30க்குள் மதுரை ஆதீனம் பதில் தர உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். மதமோதலை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்துக்கு தந்த முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கில் மதுரை ஆதீனம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்
Advertisement