அந்தியூரில் விவசாய நிலத்துக்கு நிபந்தனை பட்டா மற்ற எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம்
ஈரோடு: அந்தியூர் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் விவசாய நிலங்களை நிபந்தனை பட்டாவாக மற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாய நிலங்களை நிபந்தனை பட்டாவாக மாற்றி நிலத்தை ஜீரோ மதிப்பு ஆக்கியதை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியரை சந்திக்கச் சென்ற விவசாயிகளை காவல்துறையினர் தடுத்ததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினர். விவசாயிகளிடம் சார் ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ வெங்கடாசலம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. நிபந்தனை பட்டாவை நீக்க உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement