மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு - குக்கி சமூக ஆயுதக் குழுவினர் 10 பேர் சுட்டுக்கொலை!
08:38 AM Nov 12, 2024 IST
Share
மணிப்பூர்: ஜாகுர்தோர் பகுதியில், பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சூட்டில், குக்கி ஆயுதக் குழுவை சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போரோ பெக்ராவில் உள்ள காவல் நிலையத்தை நோக்கி குக்கி ஆயுதக் குழுவினர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், CRPF படையினரின் பதில் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதில் பாதுகாப்புப் படையை சேர்ந்த ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.