போலி பேராசிரியர்களை கணக்கு காட்டிய விவகாரம்: 163 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. நோட்டீஸ்
சென்னை: போலி பேராசிரியர்களை கணக்கு காட்டிய விவகாரம் குறித்து 163 பொறியியல் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 163 பொறியியல் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. போலி பேராசிரியர்கள் கணக்கு காட்டப்பட்ட விவகாரத்தில் முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். முன்னாள் பதிவாளர் பிரகாஷ் உள்பட 10 அதிகாரிகளை பொறுப்பில் இருந்து விடுவிக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஒரே பேராசிரியர் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றிய விவகாரத்தில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சிண்டிகேட் குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி பல்கலை. பதிவாளர் குமரேசன் ஆணை உத்தரவிட்டார். நோட்டீஸ் கிடைத்த 10 நாட்களில் விளக்கம் அளிக்க பல்கலைக்கழக பதிவாளர் குமரேசன் உத்தரவிட்டார்