சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் தற்போது, அங்கு பேராசிரியராக பணியாற்றி வருகிறார். துணை வேந்தராவதற்கு முன்பாக இயந்திரவியல் துறையின் கீழ் இன்ஸ்டிட்யூட் ஆப் எனர்ஜிஸ்டடிஸ் துறையில் பணியாற்றினார். அப்போது அவர் நிதிமுறை கேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று கூடிய சிண்டிகேட் கூட்டத்தில் அவரை சஸ்பெண்ட் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்றுடன் ஓய்வு பெற இருந்த நிலையில் முறைகேடுகள் தொடர்பாக பழைய புகாரின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான உத்தரவு நகல் அவரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.