சென்னை : அண்ணா பல்கலை மாணவி பலாத்கார வழக்கில் கைதான ஞானசேகரனிடம் மீண்டும் விசாரணையை போலீசார் தொடங்கினர். வலிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஞானசேகரனுக்கு சிகிச்சை முடிந்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.