தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சர்ச்சை விவகாரம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது; காமராஜரை கொல்ல முயன்றவர்கள் யார்?.. அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை கேள்வி

Advertisement

சென்னை: காமராஜர் குறித்து திமுக எம்பி திருச்சி சிவா சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். பின்னர், செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதி. அங்குள்ள சாலைகள் பழுது மற்றும் பொதுமக்களின் பிரச்னைகளையும் ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் இருந்து மனுவாகப் பெற்று முதல்வரிடம் கொடுத்துள்ளோம். ஊரகத்துறை அமைச்சருடன் பேசி நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதியளித்துள்ளார்.

காமராஜர் சர்ச்சை விவகாரத்துக்கு நேற்று காலையே முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. இந்த விவகாரத்தில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும் என்றும், குறைந்தபட்சம் மானத்தை காப்பாற்றுவதற்காக தனியாக போட்டியிட தயாரா என்றும் முன்னாள் பாஜ தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ஆடு நனையுதே என்று ஓநாய் அழுததாம். அதுபோன்று காங்கிரசை பத்தி அண்ணாமலைக்கு எவ்வளவு பெரிய கவலை. காமராஜரை கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் யார்?. அண்ணாமலையை கேளுங்கள்.

பாஜ மூதாதையர்கள், அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்ற கொள்கைவாதிகள், காமராஜரை டெல்லியில் வீட்டோடு வைத்து கொளுத்தி கொலை செய்ய முயற்சி செய்தனர். அதனை செய்துவிட்டு தற்போது வாக்குகளுக்காக காமராஜருக்கு பிறந்த நாள் விழா எடுப்பது, நினைவு நாளை அனுசரிப்பது என வேஷம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். எனவே, பாஜ, ஆர்எஸ்எஸ் வேஷத்தை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement