அண்ணாமலையை அரசியலுக்காக சந்திக்கவில்லை : டிடிவி தினகரன்
சேலம்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சேலத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி:
Advertisement
அதிமுக செயற்குழு, பொதுக்குழு பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அமமுக தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அண்ணாமலையை நான் அரசியலுக்காக சந்திக்கவில்லை. அவரும் நானும் நண்பர்களாக இருக்கிறோம்.
நட்பு ரீதியில் அவரை சந்தித்து பேசினேன். இதில் அரசியல் ஏதும் இல்லை. நீதிமன்ற வழிகாட்டுதல்படி தான் விஜய் கூட்டத்திற்கு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. அதன்படி அவர் அந்த நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும். திருப்பரங்குன்றத்தில் முருகன் பெயரை சொல்லி எந்த ஒரு அரசியல் இயக்கமோ அரசியலமைப்போ அரசியல் செய்யக்கூடாது.
Advertisement