தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அண்ணா பல்கலைக்கழகம் -தன்னாட்சி இணைப்புக் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல்: மாணவர்களின் தொழில் திறனை மேம்படுத்தும் புதிய முயற்சி

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் தன்னாட்சி இணைப்புக் கல்லூரிகளில் இளங்கலைப் பட்டப்படிப்பிற்கான புதிய பாடத்திட்டங்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் தொழில் தேவைகள் மற்றும் உலகளாவிய கல்வி மாற்றங்களை கருத்தில் கொண்டு இந்த பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

பாடத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

அறிவும் திறமையும் மேம்படும் பாடத்திட்டம்:மாணவர்களின் அறிவுத் திறனையும் தொழில் வளர்ச்சியையும் மேம்படுத்தும் வகையில், கல்வித் துறை நிபுணர்கள், ஆராய்ச்சி நிறுவங்களின் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் மாணவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட குழுவினால் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேன்மை பட்டம் வழங்கும் நடைமுறை

படிப்பில் 8.5க்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு மேன்மை பட்டமும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். இது உயர்ந்த வேலை வாய்ப்புகளை வழங்கும் வாய்ப்பைக் கொண்டுள்ளது. உலகளாவிய கல்வி நிலைக்கு ஏற்ப பாடத்திட்டம்:ஆங்கில மொழித் திறனையும், பிற நாட்டுக் கல்விக்கான தகுதிகளையும் மாணவர்கள் பெறும் வகையில் பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குழுப் பணிகளுக்கு ஊக்கம்

”புதிய யோசனைகளுக்கான மாற்றுத் திட்டங்கள்” என்ற பாடத்தின் கீழ் குழுவாக செயல்படும் திறனை ஊக்குவிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

தொழில் சார்ந்த பாடங்கள்

இரண்டாம் பருவத்திலிருந்தே தொழில்நுட்ப நடைமுறைகள் மற்றும் தொழில் சார்ந்த திறன்களை மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கான பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

வேலை வாய்ப்பை மேம்படுத்தும் திட்டங்கள்

மாநில அரசின் ”நான் முதல்வன்” திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும். ஆசிரியர்களுக்காகவும் பயிற்சி முகாம்கள் நடைபெறும்.

புதிய தொழில்நுட்பங்கள் சேர்ப்பு

செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் தரவுத் தொழில்நுட்பம் போன்ற துறைகள் குறித்து கட்டாய பாடங்கள் வழங்கப்படும்.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பாடங்கள் மூலம் மாணவர்களுக்கு பொது விழிப்புணர்வு வழங்கப்படும். பொறியியல் தரநிலைகள் பற்றி பாடம்:உலகளாவிய தரநிலைகளை அறிய மற்றும் கடைப்பிடிக்க ஒரு தனி பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் திறன்கள் பாடம்

முதல் இரண்டு பருவங்களில் மனவலிமை, நேர்மறை சிந்தனை, விளையாட்டுத் திறன்கள் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவை பற்றிய பாடங்கள் வழங்கப்படும். இறுதி நிலைப் திட்டம் ஐந்தாம் பருவத்திலிருந்து துறைவாரியாக மாணவர்கள் குழுவாக இணைந்து திட்டங்களை செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இது தொழில்துறையில் தங்களை நிறுவும் திறனை மாணவர்களுக்கு அளிக்கும். இந்த புதிய பாடத்திட்டங்கள், மாணவர்களை நவீன உலகத் தொழில்கள் சந்திக்கத் தயாராக உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. தொழில் வாய்ப்புகளும், திறன்மிக்க பட்டதாரிகளும் உருவாகும் இந்த மாற்றம், மாணவர்களின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

Advertisement

Related News