அண்ணா பிறந்த நாள் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் ரேஸ்
*கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
கரூர் : கரூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மிதிவண்டிப் போட்டி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார்.பின்னர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செப்டம்பர் 15ம் தேதியன்று தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தை சிறப்புற கொண்டாடும் வகையில் அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், கரூர் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டியானது 3 பிரிவுகளில் மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
13 வயதிற்குபட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரத்திற்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் துவங்கி வழி - கரூர் - திண்டுக்கல் ரோடு, மாவட்டஆட்சியரகம், வெங்கக்கல்பட்டி பாலம், லிட்டில்ஃபிளவர் பள்ளி ஆர்ச், மணவாடி பாரத் பெட்ரோல் பங்க் வரை சென்று மீண்டும் திரும்பி ஆஸ்ரமம் பள்ளி, வெங்கக்கல்பட்டி பாலம், மாவட்ட ஆட்சியரகம், மாவட்ட விளையாட்டு அரங்கம் ஆர்ச் வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முடியும் வரையில் நடைபெற்றது.
13 வயதிற்குபட்ட மாணவர்கள் மற்றும் 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவியர்களின்- 15 கி.மீ.தூரத்திற்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் துவங்கி வழி - கரூர் - திண்டுக்கல் ரோடு, மாவட்டஆட்சியரகம், வெங்கக்கல்பட்டி பாலம், மணவாடி பாரத் பெட்ரோல் பங்க், அம்மன் நகர் வரை சென்று மீண்டும் திரும்பி ஆஸ்ரமம் பள்ளி, வெங்கக்கல்பட்டி பாலம், மாவட்ட ஆட்சியரகம், மாவட்ட விளையாட்டு அரங்கம் ஆர்ச் வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முடியும் வரையில் நடைபெற்றது.
15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களின் 20 கி.மீ. தூரத்திற்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் துவங்கி வழி - கரூர் - திண்டுக்கல் ரோடு, மாவட்டஆட்சியரகம் வெங்கக்கல்பட்டி பாலம், மணவாடி பாரத் பெட்ரோல் பங்க், செல்லாண்டிபட்டி பேருந்து நிறுத்தம் வரை சென்று மீண்டும் திரும்பி மணவாடி, ஆஸ்ரமம் பள்ளி, வெங்கக்கல்பட்டி பாலம் மாவட்ட ஆட்சியரகம், மாவட்ட விளையாட்டு அரங்கம் ஆர்ச் வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முடியும் வரையில் நடைபெற்றது.
அண்ணா மிதிவண்டி போட்டியில் முதலிடம் பெற்றவர்களுக்கு ரூ-5000/-ம் வீதம் 6 நபர்களுக்கும், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு ரூ-3000ம் வீதம் 6 நபர்களுக்கும், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு ரூ-2000/-ம் வீதம் 6 நபர்களுக்கும், நான்காமிடம் முதல் பத்தாமிடம் வரை பெற்றவர்களுக்கு ரூ- 250/-ம் வீதம் 42 நபர்களுக்கும் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மேலும், வெற்றி பெற்ற 60 நபர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இப் போட்டியில் 86 மாணவர்கள் மற்றும் 57 மாணவிகள் மொத்தம் 143 மாணவ/மாணவியர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். இப்போட்டியில், கரூர் மாவட்ட தடகள சங்க செயலர் பெருமாள், கரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் குணசேகரன், தடகளப் பயிற்றுநர் சபரிநாதன் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.