அனில் அம்பானியின் ரூ.1400 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
புதுடெல்லி: பணமோசடி வழக்கு விசாரணையில் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.1400கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் தொடர்பான சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.7500கோடி மதிப்புள்ள சொத்துக்களை சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி இருந்தனர். இந்நிலையில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.1400கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்குவதற்கு தற்போது அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் மூலமாக மொத்தம் ரூ.9000கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு எதிரான அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அவரை ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அவர் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆஜராவதாக தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்த அதிகாரிகள் அவரை நேரில் ஆஜராகும்படி மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.