ராகவேந்திரா பிருந்தாவனத்தில் ஆனி மாத பவுர்ணமி
Advertisement
அதனை தொடர்ந்து, மக்கள் சுபிக்ஷமுடன் வாழ ஞானலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டு ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் யாகம் வளர்த்து சத்தியநாரயண பூஜையும் செய்து மகாதீப ஆராதனையை சித்தர் பக்தர்களுக்கு காண்பித்தார். இந்நிகழ்வில், மதுராந்தகம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார், மேனாள் கல்லூரி கல்வி இணை இயக்குனர் சிவ.பொன்னம்பலவாணன், சென்னை மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் சமூகத்தினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யோகி ரகோத்தமா சுவாமிகள் அறக்கட்டளையின் முதன்மை அறங்காவலர் ஏழுமலைதாசன் தலைமையில் செய்திருந்தனர்.
Advertisement