அங்கன்வாடி மையத்தில் 6 வயது சிறுவன் மாயம்: ஓடையில் தவறி விழுந்திருக்கலாம் என அச்சம்
ஈரோடு: ஈரோடு அருகே அங்கன்வாடி மையத்தில் 6 வயது சிறுவன் காணாமல்போன நிலையில், தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு சூரம்பட்டி பகுதியில் இயங்கிவரக்கூடிய குழந்தைகள் மையத்தில் ஜெகநாதன் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி, சந்திரகுமாரி ஆகியோருடைய 6 வயது சிறுவன் சஞ்சய் காணாமல்போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன. மூன்று பெரும் தனியார் பள்ளியில் படித்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில், இன்று வெளியூர் செல்வதால் குழந்தைங்களை குழந்தைகள் மையத்தில் விட்டு சென்றுள்ளனர்.
இந்த சூழ்நிலையில்,சிறுநீர் கழிப்பதற்காக குழந்தைகள் வெளியே வந்தபோது சிறுவன் ஒருவன் காணாமல் போய் இருக்கின்றான். சஞ்சய் காணாமல் போய் இருப்பது குறித்து அவரோட சகோதிரிகள் அங்கவடி மையம் பொறுப்பாளரிடம் கூறி இருக்கிறார்கள். அதனை தொடர்ந்து பொதுமக்களுடன் சேர்ந்து சிறுவனை தேடும் பணியில் முதலில் ஈடுபட்டார்கள். குழந்தைகள் மையம் அருகில் பெரும்பள்ளம் ஓடை செல்வதால் தவறி விழுந்து இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்ததான் பெயரில் சம்பவ இடத்துக்கு வந்த சூரம்பட்டி போலீசார் மற்றும் அரசு மருத்துவமனை போலீசார் ஆகியோர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.