ஆண்டிபட்டி அருகே கிளியன்சட்டி மலையடிவாரத்தில் பழங்கால கற்கருவி கண்டுபிடிப்பு!!
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கிளியன்சட்டி மலையடிவார பகுதியில் 4,000 ஆண்டுகள் முன் வாழ்ந்த பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளது. மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்தவர் விவசாயி மலைச்சாமி. இவரது மகள் வர்ஷாஸ்ரீ தந்தையுடன் மலையடிவாரத்தில் உள்ள விளைநிலத்தில் மண்ணில் பாதி அளவு புதைந்திருந்த கல்லை தோண்டி எடுத்துள்ளார். கூர்மை தீட்டப்பட்டு கல் வழவழப்பானதாக இருந்ததால் தந்தையிடம் காண்பித்துள்ளார். கல் வித்தியாசமாக இருந்ததால் கடமலைக்குண்டு அரசு மேல்நிலை பள்ளி தமிழ் ஆசிரியரும் தொல்லியல் ஆர்வலருமான செல்வத்திடம் எடுத்து சென்று காண்பித்துள்ளனர்.
அந்த கல் 4,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழங்கால மக்கள் பயன்படுத்திய ஆயுதமாக இருக்கலாம் என தொல்லியல் ஆர்வலர் செல்லம் தெரிவித்துள்ளார். நுண் கற்கலாம், புதிய கற்கலாம், பெருங்கற்காலம், வரலாற்றுக்கால ஆகிய நான்கு காலங்களில் சேர்ந்த கல் கருவிகள், விலங்குகளில் எலும்பிலான ஆயுதங்கள், பானை ஓடுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளதால் தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்திக்கின்றனர்.