ஆந்திர மதுபான ஊழல் வழக்கு ஒய்.எஸ்.ஆர்.காங். எம்பிக்கு ஜாமீன்
திருமலை: ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் தொடர்புடைய எம்பி மிதுன்ரெட்டிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட மதுபான கொள்கையால் ரூ.4 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய ராஜம்பேட்டை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.பி.மிதுன் ரெட்டியை கடந்த ஜூலை 19ம் தேதி சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராஜமுந்திரி சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், அவருக்கு நீதிமன்றம் மீண்டும் ஜாமின் வழங்கியது. அதனடிப்படையில் எம்பி மிதுன்ரெட்டி நேற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரை கட்சி தலைவர்கள் வரவேற்றனர்.
Advertisement
Advertisement