ஆந்திர மாநிலம் கடப்பாவில் வினோதம் மயானத்தில் அடுத்தடுத்து கல்லறை ரிசர்வேஷன் செய்யும் தம்பதிகள்
திருமலை: ஆந்திர மாநிலம் கடப்பாவில் ஒரு விசித்திரமான வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. இறந்த பிறகும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கணவன், மனைவி முன்கூட்டியே தங்களை அடக்கம் செய்யும் இடத்தை முன்பதிவு செய்கிறார்கள். கடப்பா நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அருகில் கிறிஸ்தவர்களுக்காக அடக்கம் செய்ய மயானம் உள்ளது. அங்கு, கல்லறைகளுக்கு அருகில் ரிசர்வ் என்று பலகை வைக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதற்கு காரணம் கணவன் இறந்தால், மனைவி கணவனின் கல்லறைக்கு அடுத்த கல்லறையில் முன்கூட்டியே ரிசர்வ் செய்துவிடுகிறார். மனைவி இறந்தால், கணவரும் அவ்வாறே செய்கிறார். அந்த இடம் முன்கூட்டியே ஒதுக்கப்பட்ட இடத்தில் பலகைகள் அமைக்கப்படுகின்றன. இறந்த பிறகு ஒன்றாக இருப்போம் என்று நினைத்து, ஏற்பாடுகளைச் செய்வது கடப்பாவில் சுவாரஸ்யமானதாக பேசப்படுகிறது.
Advertisement