ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
Advertisement
அதில் 3 பைகளில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த அந்த வாகனத்தில் 100 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இந்த சரக்கு வாகனம் திருவள்ளூர், சென்னை வழியாக தூத்துக்குடிக்குச் செல்லவிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சுகுமார் மற்றும் கலைச்செல்வன் ஆகிய இருவரையும் கைது செய்து கலால் டிஎஸ்பி அனுமந்தன் விசாரணை நடத்தி வருகிறார்.
Advertisement