ஆந்திர மாவட்டம் நெல்லூர் அருகே கார் மீது லாரி மோதி கோர விபத்து: குழந்தைகள் உட்பட 7 பேர் பலி
அமராவதி: ஆந்திராவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் பலியாகி இருக்கிறார்கள். ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பெரமனா கிராமம் அருகே வந்து தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் வந்து வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிரே தவறாக எதிர் திசையில் மணல் ஏற்றி கொண்டு வந்த டிப்பர் லாரி மோதியதில் கார் அப்பளம் போல் நொருங்கியது. இந்த விபத்தில் வந்து சம்பவ இடத்திலேயே காரில் பயணித்த குழந்தைகள் உட்பட ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரியின் ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன. விசாரணையில் மணல் ஏற்றி கொண்டு எதிர் திசையில் லாரி வந்தது என்று தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து காரில் வந்தவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.