ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சா பறிமுதல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வாகன சோதனையில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கர்நாடக, ஆந்திர போன்ற மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பான்பராக், குட்கா, மதுபானங்கள் மற்றும் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து மாநில எல்லை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்று கிருஷ்ணகிரி மதுவிலக்கு பிரிவு போலீசார் ஆந்திரா, தமிழ்நாடு மாநில எல்லையான கிருஷ்ணகிரியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமாக ஆந்திராவிலிருந்து தமிழகம் நோக்கி வந்த டாட்டா ஏசி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 2 கிலோ எடை கொண்ட 50 பொட்டலங்கள் இருந்தது. விசாரணையில் அவை 100 கிலோ கஞ்சா போதை பொருள் என்னும் ஆந்திராவிலிருந்து தமிழகத்தில் திருச்சி மற்றும் மதுரை பகுதிகளுக்கு கடத்தி செல்லவது தெரியவந்தது. இதையடுத்து 100 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய டாட்டா ஏசி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும். கடத்தலில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த வெள்ளைப்பாண்டி மற்றும் ஆந்திராவில் சேர்ந்த வேணுகோபால், ஹரிகிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்