இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்ரீ சரணிக்கு, ரூ.2.5 கோடி பரிசு தொகை, அரசு வேலை : ஆந்திர அரசு அறிவிப்பு!!
அமராவதி : இந்திய வீராங்உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்ரீ சரணிக்கு, ரூ.2.5 கோடி பரிசு மற்றும் அரசு வேலை வழங்கப்படும் என ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில், 52 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று முதல்முறை கோப்பையை வென்றது.இந்த நிலையில், இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்த ஆந்திரத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் ஸ்ரீ சரணி, முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜ் ஆகியோர் இன்று (நவ. 7) ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.
அப்போது, இந்திய வீராங்கனைகள் அனைவரும் கையெழுத்திட்ட கிரிக்கெட் ஜெர்சியை முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு, ஸ்ரீ சரணி பரிசளித்தார்.இதனைத் தொடர்ந்து, 21 வயதான இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணிக்கு 2.5 கோடி பரிசுத் தொகை, குருப் 1 நிலையிலான மாநில அரசு வேலை மற்றும் கடப்பா மாவட்டத்தில் 1,000 சதுரடி வீட்டு மனை ஆகியவை வழங்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளரான கடப்பாவின் யெர்மலா பள்ளி எனும் கிராமத்தைச் சேர்ந்த வீராங்கனை ஸ்ரீ சரணி, அவரது மாமாவின் மூலம் கிரிக்கெட் பயிற்சி பெற்றதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.