அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கியது நான் செய்த தவறு: ராமதாஸ் பரபரப்பு பேட்டி
விழுப்புரம்: நான் செய்த தவறுகளில் ஒன்று அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கியது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்; அன்புமணி தலைமையில் ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது. அரசியலில் சில தவறுகளை நான் செய்ததுண்டு. நான் செய்த தவறுகளில் ஒன்று அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கியது. மற்றொரு தவறு அன்புமணிக்கு கட்சித் தலைவர் பதவியை கொடுத்தது.
அன்புமணியின் பேச்சும் செயலும் அருவருக்கத்தக்கதாக உள்ளது. பாமகவில் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளதாக மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு அன்புமணியின் பேச்சும் செயல்பாடும் அமைந்துள்ளது. அன்புமணி கும்பல் பற்றி சொன்னால் என் வளர்ப்பு சரியில்லை என்பீர்கள். அன்புமணி கும்பலில் உள்ள எல்லோரும் நான் வளர்த்த பிள்ளைகள்தான். நான் வளர்த்த பிள்ளைகள் சில, பல காரணங்களுக்காக அன்புமணியுடன் சேர்ந்துவிட்டனர். பாமகவில் உள்ள 5 எம்எல்ஏக்களில் 2 பேர் என்னுடன் உள்ளனர், 3 பேர் அன்புமணி கும்பலுடன் இருக்கின்றனர்
அண்மையில் பிரதமர் மோடி சேலத்தில் என்னை ஆரத்தழுவி பாராட்டினார். பாசத்தோடு பழகிய இந்திய தலைவர்கள் என்மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தனர். சட்டமன்ற உறுப்பினர்கள் 2 பேர் என்னோடு இருக்கிறார் என்று கூறினார்.