வாழப்பாடியில் நடந்த மோதல் தொடர்பாக அன்புமணி தரப்பு நிர்வாகிகள் உட்பட 7 பேர் கைது
சேலம்: வாழப்பாடியில் நடந்த மோதல் தொடர்பாக அன்புமணி தரப்பு நிர்வாகிகள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் நடராஜ் தந்த புகாரை அடுத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அன்புமணி ஆதரவாளர்கள் ஜெயபிரகாஷ், சடையப்பன், சங்கர், தினேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாழப்பாடி அருகே ராமதாஸ் - அன்புமணி தரப்பினர் மோதல் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
வடுகத்தம்பட்டியில் பாமக எம்.எல்.ஏ. அருள் காரை தாக்கிய சம்பவத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அன்புமணி ஆதரவாளர் ஜெயபிரகாஷ் தந்த புகாரில் ராமதாஸ் ஆதரவாளர்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் மோதல் தொடர்பாக அன்புமணி ஆதரவாளர்கள் 7 பேரை போலீசார் கைது செய்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.