தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

16 குற்றச்சாட்டுகள் பற்றி அன்புமணி விளக்கம் அளிக்க ஆக.31 வரை கெடு: பாமக நிறுவனர் ராமதாஸ்

விழுப்புரம்: 16 குற்றச்சாட்டுகள் பற்றி அன்புமணி விளக்கம் அளிக்க ஆக.31 வரை கெடு வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பட்டானூர் தனியார் திருமண மண்டபத்தில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். இந்த பொதுக்குழுவில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பாமகவில் 8 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை அளித்தது.

Advertisement

ராமதாசுக்கும் எதிராக செயல்பட்டு கட்சிக்கு களங்கத்தையும், குழப்பத்தையும், பிளவையும் அன்புமணி ஏற்படுத்தியுள்ளார். ராமதாஸ் இருக்கைக்கு அருகே ஒட்டுகேட்பு கருவி வைக்கப்பட்டது. அன்புமணி நடத்திய பொதுக்குழுவில் காலி நாற்காலி போட்டு ராமதாசை அவமானப்படுத்தியது உள்பட 16 குற்றச்சாட்டுகள் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது. அந்த அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாசிடம் சமர்ப்பித்த நிலையில் நேற்று அன்புமணியிடம் விளக்கம் கேட்டு பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் அன்புமணி விவகாரம் குறித்து விவாதிக்க தைலாபுரத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு ஆலோசனை நடத்தியது. 16 குற்றச்சாட்டுகள் பற்றி விளக்கம் கேட்டு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸ்; அன்புமணி மீது என்னென்ன குற்றச்சாட்டுகள் என்பது குறித்து ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. 16 குற்றச்சாட்டுகள் தொடர்பாக வரும் 31ஆம் தேதிக்குள் அன்புமணி பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார்.

Advertisement