தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அன்புமணி விவகாரம், தேர்தல் ஆணையத்தில் புகார் ராமதாஸ் திடீர் சென்னை பயணம் விஐபிக்களை சந்தித்து முக்கிய பேச்சு: கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கேட்டு தலைமை செயலாளரிடம் மனு

திண்டிவனம்: அன்புமணி விவகாரம் உச்ச கட்டம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் கட்சி, சின்னம் கேட்டு மனு அளித்துள்ள நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று திடீரென சென்னை வந்துள்ளார். அங்கு விஐபிக்களை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு கேட்டு தலைமை செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வசித்து வருகிறார். அவரது பாதுகாப்புக்காக தற்போது 3 காவலர்கள் கைத் துப்பாக்கியுடன் உள்ளனர்.

Advertisement

பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதலால் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இருந்தும், அன்புமணி சென்னை பனையூரிலிருந்தும் கட்சியை வழிநடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுகேட்பு கருவி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து ராமதாஸ் தரப்பில் கிளியனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த ஒட்டு கேட்பு கருவியை அன்புமணிதான் வைத்தார் என்று ராமதாஸ் குற்றம்சாட்டி இருந்தார்.

இதனிடையே 2 வாரத்துக்கு முன்பு ராமதாசின் தீவிர ஆதரவாளரும் ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலினை வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி நடந்தது. ராமதாசின் மூத்த மகள் காந்தி மயிலாடுதுறையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இருந்த நிலையில் அங்கு குண்டுவீச்சு சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக சிலரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இவ்வாறாக தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களால் ராமதாஸ் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாமக நிர்வாகிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

தற்போது பாமக விவகாரம், சின்னம் தொடர்பாக டெல்லி சென்றுள்ள ஜி.கே.மணி மற்றும் ராமதாசின் தனிச் செயலாளர் சுவாமிநாதன் ஆகியோர் தேர்தல் ஆணையரை சந்தித்து, 91 பக்கங்கள் அடங்கிய மனுவை தாக்கல் செய்துள்ளனர். பாமகவிலிருந்து அன்புமணி நீக்கம், கட்சி விதிகள் குறித்த ஆவணங்கள், சின்னம் தொடர்பாக மனு அளித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்தான சூழல் உள்ளதால் அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டுமென கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் இருக்கும் ராமதாசுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி தலைமை செயலாளரை சந்தித்து சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் தலைமையில் பாமக நிர்வாகிகள் நேற்று மனு கொடுத்துள்ளனர்.

இந்த சூழலில் பாமக நிறுவனர் ராமதாஸ், நேற்று காலை திடீரென சென்னை புறப்பட்டு சென்றார். தனது மகள் கவிதா வீட்டில் தங்கியுள்ள அவர், பாமக உள்கட்சி விவகாரம் தொடர்பாக விஐபிக்கள் சிலரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே, ராமதாஸ்-அன்புமணி மோதல் உருவான சூழலில் ஆடிட்டர் குருமூர்த்தியும், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் ராமதாசை தைலாபுரத்தில் சந்தித்து பேசினர். தொடர்ந்து, சென்னை வந்த ராமதாஸை ஏ.கே. மூர்த்தி வீட்டில், ஆடிட்டர் குருமூர்த்தி மீண்டும் சந்தித்து பேசினார். தற்போது, அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் பாமக மற்றும் சின்னத்துக்கு உரிமைகோரி ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளது.

அதே நேரத்தில் பாமகவை ஒன்றிணைத்து கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியில் பாஜ இறங்கி உள்ளது. ஆனால், பாஜ கூட்டணியில் இணைய ராமதாஸ் விரும்பவில்லை. ஏற்கனவே, அதிமுகவில் பல கோஷ்டிகள் உருவாகி உள்ளதாலும், ஓபிஎஸ் மற்றும் டிடிவி கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளதாலும், நிலையான கூட்டணியை உருவாக்க முடியாமல் பாஜ தவித்து வருகிறது. இதனால் சென்னை வந்துள்ள ராமதாஸை மீண்டும் விஐபிக்கள் சிலர் சந்தித்து கூட்டணிக்கு இழுக்க பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

* ராமதாசின் பேச்சை நாங்கள் பொருட்படுத்த போவதில்லை; திலகபாமா திட்டவட்டம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அன்புமணியின் ஆதரவு பாமக பொருளாளர் திலகபாமா நேற்று அளித்த பேட்டி: பாமக தலைவர் அன்புமணி தலைமையிலான நிர்வாகிகள் குழுவுக்கு, தேர்தல் ஆணையம் 2026, ஆக. 26ம் தேதி வரை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், அதற்கு எதிர்மறையாக யாராவது பேசி வந்தால் ஜனநாயகரீதியாக யாரும் ஒத்துக்கொள்ள முடியாது. ராமதாஸ் பேசி வருவதை எல்லாம் நாங்கள் பொருட்படுத்தாமல் மக்கள் பணியில் எங்களை இணைத்துக் கொண்டுள்ளோம். அன்புமணியை தலைவராக நீட்டித்த தேர்தல் ஆணையத்தின் ஆவணம் தவறானது என கூறும் ஜி.கே.மணி அதற்கான ஆதாரமாக ஆவணத்தை வெளியிட வேண்டும். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்த கடிதத்தை நாங்கள் வெளியிட்டுள்ளோம். அதற்கு மேல் அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்யட்டும். பாமக என்பது ஒன்றுதான். அப்பா, மகன் பிரச்னை குறித்து பாமக நிர்வாகிகள் பேசுவதற்கு ஏதுமில்லை. எங்களைப் பொறுத்தவரை கட்சி நிர்வாகிகள் ஒன்றுதான். இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement