தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அன்புமணியுடன் எந்த முரண்பாடும் இல்லை : பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி

சென்னை: அன்புமணியுடன் எந்த முரண்பாடும் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையில் மோதல் தொடர்ந்து வருகிறது. பாமக தலைவர் அன்புமணியை பதவி நீக்கம் செய்து, அவரை செயல் தலைவராக ராமதாஸ் நியமனம் செய்தார். அதுமட்டுமல்லாமல் அன்புமணி அவரின் தாயையே பாட்டிலை எடுத்து வீசி அடிக்க முயற்சித்தார் என்றும் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

இதன்பின் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் சமாதானம் மேற்கொள்ள நிர்வாகிகள் முயற்சித்து வந்தனர். இந்த நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தி பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து இன்று திடீரென ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து சென்னை புறப்பட்டார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசுகையில், தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணியை சந்தித்தபோது சமரசம் ஏற்பட்டதா என்ற கேள்விக்கு பதில் தெரிவித்துள்ளார். அதில், பல் மருத்துவரை சந்திக்க மட்டுமே சென்னை வந்துள்ளேன்; வேறு சந்திப்புக்கு திட்டமிடவில்லை. அன்புமணியை சந்திக்க திட்டம் எதுவும் இல்லை. அன்புமணியுடன் இணைந்து செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் என பதில் தெரிவித்தார்.

பாஜக- பாமக கூட்டணி உறுதியாகுமா? - ராமதாஸ் பதில்

பாஜக பாமக கூட்டணி உறுதியாகுமா? என்ற கேள்விக்கு தனக்கு தெரியாது என மருத்துவர் ராமதாஸ் பதில் தெரிவித்தார்.

கூட்டணி உறுதியாகுமா? என நினைத்துக்கூட பார்க்கவில்லை

அமித்ஷா வருகையின்போது பாஜக -பாமக கூட்டணி உறுதியாகுமா என்பதை பற்றி நினைத்து பார்க்கவில்லை.

முகுந்தன் கட்சி பதவியை விரும்பவில்லை -ராமதாஸ்

தனது பேரன் முகுந்தன் கட்சி பொறுப்பை விட தொழில் செய்வதில் ஆர்வம் காட்டுவதாக ராமதாஸ் விளக்கம் அளித்தார்.

 

Related News