நாகரீகமற்று கொச்சையாக பேசியதாக அன்புமணிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம்..!!
சென்னை: நாகரீகமற்று கொச்சையாக பேசியதாக அன்புமணிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சொந்த தந்தையை கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை. கரூர் கூட்ட நெரிசலில் இறந்த குழந்தைகளை என்னுள் ஒருவராகவே கருதுகிறேன். என்னை மக்களில் ஒருவராக கருதுகிறேன்; ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன். எந்த தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார் என்ற முதல்வரின் வழியில் பயணிக்கிறோம். நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம்; ஆறுதல் தேடுகிறோம், ஆறுதல் சொல்கிறோம் என தெரிவித்தார்.
Advertisement
Advertisement