அன்புமணி பதவி நீட்டிப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது: பாமக வழக்கறிஞர் கே.பாலு பேட்டி
சென்னை: அன்புமணி பதவி நீட்டிப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் இருந்து அன்புமணிக்கு கடிதம் கிடைக்கப் பெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்தில் இருந்து அன்புமணிக்கு வந்த கடிதத்தை கே.பாலு வெளியிட்டார்.
மாமல்லபுரத்தில் ஆக.8ல் நடந்த பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. தேர்தல் ஆணையம் அங்கீகாரம் மூலம் அன்புமணி தலைமையில் இயங்குவதே பாமக என்பது உறுதியாகியுள்ளது. 2026 ஆக.1 வரை அன்புமணியின் பதவியை நீட்டித்த தீர்மானத்துக்கு ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. பாமகவின் தலைமை அலுவலகமாக சென்னை தியாகராயநகரில் உள்ள திலக் தெருவில் உள்ள முகவரியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது
அன்புமணியை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும்தான் பாமக கொடியை பயன்படுத்த முடியும். பாட்டாளி மக்கள் கட்சியில் குழப்பங்கள் தீர்ந்துவிட்டன. பாமக வேட்பாளருக்கு மாம்பழம் சின்னத்தை வழங்க அன்புமணிக்கே அதிகாரம் உள்ளது. அன்புமணி தலைமையைதான் 100 சதவீத பாமகவினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அன்புமணியை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள்தான் பாமகவினர். பா.ம.க.வில் 100 சதவீதம் பேரும் அன்புமணி பக்கமே இருக்கின்றனர். கட்சி நிறுவனர் ராமதாஸ் உடன் உள்ள சிலரும் அன்புமணி பக்கம் வர வேண்டும். பா.ம.க.வில் 2 அணிகள் என்று இனி கிடையாது, அன்புமணி தலைமையில் பாமக இயங்குகிறது.