தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமிர்தசரஸ் நோக்கி ஏவப்பட்ட ட்ரோன்கள் : எதிரிகளின் சதித் திட்டங்களை முறியடிப்போம் என இந்திய ராணுவம் உறுதி!!

Advertisement

டெல்லி : எதிரிகளின் சதித் திட்டங்களை ராணுவம் முறியடிக்கும் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நடந்து வரும் நிலையில், 3வது நாளாக இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தான் ஏவிய டிரோன்களை இந்திய ராணுவம் முறியடித்தது. நூற்றுக்கணக்கான ட்ரோன்களும் வான் பரப்பிலேயே அழிக்கப்பட்டன. குறிப்பாக அமிர்தசரஸில் அப்பாவி மக்களை குறி வைத்து ஏவப்பட்ட பாக். ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை நடுவானிலேயே இடைமறித்து அழித்தது இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு. காலை 5 மணிக்கு பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்கள், இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இந்த நிலையில், ஆயுதங்களை சுமந்து கொண்டு வந்த டிரோனை சுட்டு வீழ்த்திய காட்சியை வெளியிட்டு இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியாவின் இறையாண்மையை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எதிரிகளின் சதித் திட்டங்களை ராணுவம் முறியடிக்கும். பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள காசா கான்ட் என்ற இடத்தில் இன்று காலை 5 மணியளவில் பாகிஸ்தானின் ட்ரோன் கண்டறியப்பட்டதும் உடனடியாக சுட்டு வீழ்த்திவிட்டோம்"இவ்வாறு தெரிவித்துள்ளது. எல்லையோர மாநிலங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவம் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமிர்தசரஸ் மக்களுக்கு அபாய ஒலி எச்சரிக்கை

“வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம், ஜன்னல் அருகே நிற்க வேண்டாம்' என அமிர்தசரஸ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் அபாய ஒலி எழுப்பி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News