அமீபா மூளைக்காய்ச்சலுக்கு மூதாட்டி பலி
திருவனந்தபுரம்: கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டம் சிறையின் கீழ் பகுதியைச் சேர்ந்த வசந்தா(77) என்ற மூதாட்டி காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் அவருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வசந்தா இறந்தார்.அதைத்தொடர்ந்து இந்த வருடத்தில் மட்டும் கேரளாவில் அமீபா மூளைக்காய்ச்சல் பாதித்து பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்து இருக்கிறது. வீட்டை விட்டு வெளியே செல்லாத வசந்தாவுக்கு எப்படி அமீபா மூளைக்காய்ச்சல் பரவியது என்பது தெரியவில்லை.
                 Advertisement 
                
 
            
        
                 Advertisement 
                
 
            
        